திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய இருவர் கைது

Gutka | Trichy News Tamil
X

திருச்சியில்  போதை பொருட்களுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Gutka - திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Gutka -திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி, நேற்று (30.08.22-ந்தேதி) திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலைய எல்லையில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ், சைனி, விமல், கணேஷ், கூல்லிப், ஆர்.எம்.டி. பவுடர் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காமட்சியம்மன் கோயில் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்தபோது அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த உறையூர் காவல்கார தெருவை சேர்ந்த கோபி (வயது 28,) மற்றும் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செந்தில் (வயது 34,) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து ரூ.7 இலட்சம் மதிப்புள்ள சுமார் 483 கிலோ 600 கிராம் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தும், விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்றவைகளால் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story