திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு
X

திருச்சியில் மாற்றம் அமைப்பு சார்பில் டிராபிக்ராமசாமி நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிகழச்சிகள் நடந்தது.

திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் கே. கே. நகர் உடையான்பட்டியில் உள்ள ரிவைரா நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் மறைந்த சமூக போராளி டிராபிக் ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மலர் அஞ்சல் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் மரகன்றுகள் வழங்கும் மற்றும் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சமூக போராளி மறைந்த டிராபிக் ராமசாமி வாழ்ந்த காலத்தில் இந்த சமூகத்தில் நடைபெறும் பல தவறுகளை தனி ஆளாக நின்று தைரியமாக எதிர்த்து சட்டப்படியும் நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்று பல வழக்குகளில் வெற்றி பெற்று தனி மனிதன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்பதை நிறுப்பித்து பல சமூக ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாகவும் முன் உதாரணமாகவும் இருந்தவர். அவருடைய 84 வயது வரை சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து பல வழக்குகளில் வெற்றியும் பெற்றார்.

அனைவராலும் அன்புடன் ஒன் மேன் ஆர்மி டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டவர். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்,மாற்றம் அமைப்பு சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கி அவரது நினைவாக மரகன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ரிவைரா நகர் நல சங்க நிர்வாகிகள் போதிதர்மன் தற்காப்பு கலை கூட சிலம்பம் மாஸ்டர் ம. மாணிக்கம்,மாஸ்டர் ராஜேஷ், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அமைப்பின் மகளிர் அணி செயலர் வழக்கறிஞர் கார்த்திகா, மணிமாறன், யாசர், நிரஞ்சன்,பாலாஜி மைக்கேல், ஹன்சிகா, பிரபு, சர்மா, சுரேஷ்,கோபி, சுந்தரம், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி மற்றும் நினைவஞ்சலி செலுத்தினர் மேலும் மறைந்த டிராபிக் ராமசாமி அவர்கள் வழியில் சமூக பணிகளை ஆற்றிட கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். நிகழ்வில் பெண்கள் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் அப்பகுதியில் கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் வழங்கப்பட்டு வீடுகளில் நடப்பட்டது.

Tags

Next Story
the future of ai in healthcare