திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை

திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை
X

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்.

திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சியில் மளிகை கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவருக்கு ஏழு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி பீம நகர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 34) இவர் திருச்சி கே கே நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் தனது அண்ணனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். பீமநகர் கூனி பஜார் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா ராஜேஷ்குமார் (வயது 20) கடந்த 15 -5 -2022 அன்று அதிகாலை மன்னார்புரம் நால்ரோடு அருகே தனது மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக காஜாமொய்தீன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜோஸ்வா ராஜேஷ்குமார் காதர் மொய்தீனை சைகை காட்டி நிறுத்தினார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

இது பற்றி காதர் மொய்தீன் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கே கே நகர் போலீசார் ஜோஸ்வா ராஜேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஜோஸ்வா ராஜேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி என் எஸ் மீனா சந்திரா குற்றம் சாட்டப்பட்ட ஜோஸ்வா ராஜேஷ் குமார் ஏழு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
why is ai important to the future