திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
X

திருச்சி வளையல்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.

திருச்சி வளையல்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.

திருச்சி பெரியகடைவீதி பகுதியில் உள்ள வளையல்காரத் தெருவில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பால்குட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் 51-வது ஆண்டு பால்குட திருவிழா கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது.

இதில் அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பூக்களை சாத்தி வழிபாடு செய்தனர். இதில் விதவிதமான பூக்கள் அலங்காரத்தில் அம்மன் அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து, பால்குடம் ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

அதன் பின்னர் தீபாராதனையும் அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலரும் திருப்பணி குழு தலைவருமான கே‌.சி. ஆறுமுகம் மற்றும் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!