இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு
X

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு நடை பெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் 23 வது மாநாட்டை திருச்சி உறையூர் கைத்தறி கல்யாண மண்டபத்தில் 19.06.2022 இன்று காலை 10 மணிக்கு தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி கொடியேற்றி தொடங்கிவைத்தார். தியாகிகளுக்கு மாநில துணை செயலாளர் சுப்பராயன் அஞ்சலி செலுத்தி, தொடக்கவுரையாற்றினர். மாநாட்டில் திருச்சி மேற்கு பகுதிச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி வரவேற்புரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட நிரவாகக்குழு உறுபினர் சிவா வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் திராவிடமணி முன்வைத்தார், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜான்பால் தெரிவித்தார், பிறகு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித் நிறைவுரையாற்றினர், இறுதியாக மேற்கு பகுதிக்குழு பொருளாளர் ரவீந்திரன் நன்றியுரை கூறினார்.

மேலும் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக நேற்று 18.6.2022 அன்று மாலை குறத்தெரு பகுதியில் 23 வது வார்டு கவுன்சிலர் க.சுரேஷ் தலைமையில்மேற்குபகுதிதுனைசெயலாளர் இப்ராஹிம் வரவேற்புரையுடன் புத்தூர்நால்ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!