திருச்சி உறையூர், சேதுராப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி உறையூர், சேதுராப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X
திருச்சி உறையூர், சேதுராப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி நகரியம் கோட்டம் சிந்தாமணி பிரிவுக்கு உட்பட்ட உறையூர் பகுதி யில் உள்ள சாலைரோடு, சுபானியாபுரம், உறையூர் ஹவுசிங் யூனிட், வெட்டுக்குழித்தெரு, புதுகாலனி ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருச்சி கிழக்கு மின்சார கோட்டத்திற்கு உட்பட்ட அளுந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி பாத்திமாநகர், அளுந்தூர், சேதுராப்பட்டி, யாகப்புடையான்பட்டி, எரங்குடி, கும்பகுறிச்சி, வேலப்புடையான்பட்டி, சூரக்குடிபட்டி, செவந்திபட்டி, கொட்டப்பட்டு, குமர பட்டி, சரளப்பட்டி, குன்னத்தூர், பிடாரம்பட்டி, துறைக்குடி, கலிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!