திருச்சி-திருப்பதி நேரடி விமான சேவை வருகிற 18-ம் தேதி முதல் துவக்கம்

திருச்சியில் சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபுநாடுகளுக்கும், சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும் நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.அதன்படி வரும் 18-ம் தேதி முதல் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.
திருப்பதியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20-க்கு திருச்சி வந்தடைகிறது. இதே போல் திருச்சியில் இருந்து மாலை 6.40-க்கு புறப்படும் விமானம் திருப்பதிக்கு இரவு 8 மணிக்கு சென்றடைகிறது. இந்த விமான சேவையானது செவ்வாய்க் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 தினங்களில் இயக்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu