திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சிகள்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36-வது ஆண்டு நினைவு நாளை (24.12.2023, ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு கீழ்க்கண்ட இடங்களில் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்படும்.
24.12.2023, ஞாயிற்றுக்கிழமை
-----------------------------------------------------
காலை 8மணி- ஶ்ரீரங்கம் மேலூர்
காலை 8.30மணி- திருவானைக்காவல்
காலை 9மணி- சமயபுரம் நால்ரோடு
காலை 10.30மணி- மண்ணச்சநல்லூர்
காலை 11.15மணி- முசிறி
மதியம் 12மணி- சிறுகமணி நகரம்
மதியம் 12.30மணி - முத்தரசநல்லூர்
மாலை 5மணி- துறையூர் தொகுதி சார்பாக அமைதி ஊர்வலம் - துறையூர்
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொருப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu