திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள்
X

ஜெயலலிதா நினைவு தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

இதே போல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த வகையில் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா .ராசு. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சோமரசம்பேட்டையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு,சார்பு அணி செயலாளர்கள் கண்ணதாசன், புல்லட் ஜான். சோனா விவேக். மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார். கோப்பு நடராஜ் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story