திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 18.3.2024, திங்கட்கிழமை, காலை 10மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ள திருச்சி நாடாளுமன்ற தொகுதி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் கழக பொதுச்செயலாளரால் அறிவிக்கப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் பாடுபடுவது, நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வது என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சிவபதி, கழக அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், துறையூர் பொதுக்குழு உறுப்பினர் சரோஜா, மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story