திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு
X

திருச்சியில் நீர்மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்களை வழங்கினார்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள் சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவின்படி எல்லா இடங்களிலும் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பகுதி கழகங்களின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல்களை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் பலவிதமான பழங்களையும் வழங்கினார். பழரசங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், பகுதி கழக செயலாளர் நீலமேகம், தர்மராஜ், மணிவேல், பாபு, மோகன், ராஜ்முஹம்மது, விஜயகுமார், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!