திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வீர வணக்க நாள் அஞ்சலி

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வீர வணக்க நாள் அஞ்சலி
X

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாய் தமிழுக்காக போராடி இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்தது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில், மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி தலைமையில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!