திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்:4 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்:4 பேரிடம் விசாரணை
X
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்தபோது புது வடிவில், தங்க கட்டிகளை எலக்ட்ரானிக் பூச்சிக்கொல்லி இயந்திரம் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றுக்குள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கத்தின் மொத்த எடை 435 கிராம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சத்து 83 ஆயிரத்து 215 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தங்கம் தொடர்பாக சிக்கிய 4 பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு