திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.29 கோடி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.29 கோடி
X

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்ட காட்சி.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.29 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலானது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் வரும் கோவில்களில் இரண்டாவது இடத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் இன்று மார்ச் 19ஆம் தேதி சிறந்த எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன், கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் கல்யாணி ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, ராஜ சுகந்தி, லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உதயகுமார், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் செயல் அலுவலர்கள் இந்து சமய அறநிலையத்துறை மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வங்கி ஊழியர்கள் முன்னிலையில் கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறந்து என்னபட்டன.

இதில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பணம் உண்டியலில் ஒரு கோடியை 29 லட்சத்து 35 ஆயிரத்து 588 இருந்ததாக எண்ணப்பட்டு உள்ளது. தங்கம் 2 கிலோ 619 கிராம், வெள்ளி 5 கிலோ 687 கிராம் இருந்தன. அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 235 அயல் நாட்டு நாணயங்கள் 893 இருந்தன சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 டம்ளர் வேப்பிலை சாறு...! வேப்பிலை ஜூஸ் குடித்தால் உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா....?