/* */

திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் சிறுவர்கள் உள்பட  3 பேர் கைது
X
கொலை செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (வயது 50) என்பவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்தார். பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு வந்தவர்களை, சந்தேகத்தின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் சித்திரைவேல் ஆகியோர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது, அவர்கள் மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மேற்படி நபர்களை பிடிக்க பின் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளரும் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது கீரனூர் காவல் சரகத்திற்குட்பட்ட பள்ளத்துப்பட்டி, மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகில் சிறப்பு உதவி ஆய்வாளர் மூன்று எதிரிகளையும் மடக்கி பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த போது அதில் 19 வயது நிரம்பிய மணிகண்டன் என்ற எதிரி மற்றும் அவனுடன் வந்த இரு இளஞ்சிறார்களும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக தகவல் கேள்விப்பட்டு வந்த மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் சம்பவ இடம் வந்து பார்த்த போது பூமிநாதன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (பொறுப்பு) கார்த்திகேயன் உத்தரவுப்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் ஆலோசனையில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட மேற்படி தனிப்படையினர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் மணிகண்டன் (வயது 19) மற்றும் 14, வயது, 9 வயதுடைய இரண்டு இளஞ்சிறார்களை கைது செய்துள்ளனர். மேற்படி குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!