திருச்சி ரிங் ரோடு பஞ்சப்பூர் சந்திப்பில் அதிநவீன சோதனை சாவடி திறப்பு
திருச்சி பஞ்சப்பூர் ரிங்ரோடு சந்திப்பில் அதிநவீன சோதனை சாவடியை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இதுவரை இயங்கிவந்த வாகன தணிக்கை சோதனை சாவடி எண் 2, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் சந்திப்பு ரிங் ரோடு அருகில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடி அதிநவீன வாகன சோதனை சாவடி ஆகும்.
இங்கு இரண்டு தானியங்கி கேமராக்கள், சி.சி டி.வி .கேமராக்கள் 4, பொது முகவரி அமைப்பு எனப்படும் பி.ஏ. சிஸ்டம் மற்றும் ஒளிரும் இரும்பு தடுப்பான்கள், சோலார் மின் விளக்கு வசதியுடன் கூடிய கழிப்பறை என எல்லா வசதிகளும் உள்ளன.
இந்த அதிநவீன சோதனை சாவடியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று காலை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த அதிநவீன சோதனைச்சாவடி தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu