திருச்சி: அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன் இன்று ஓய்வு பெற்றோர் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை கடந்த 2015ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்கவேண்டும், அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு பொருந்துவது போன்று போக்குவரத்து கழக ஓய்வூதியவர்களுக்கும் டி.ஏ. இணைத்து வழங்கவேண்டும், ஓய்வூதியர்களை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்து அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் நேருதுரை, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் கார்த்திகேயன், ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!