வீரமுத்துவேலை பாராட்டி திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கொண்டாட்டம்
திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் இனிப்பு வழங்கப்பட்டது.
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலிற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பொன்மலை ரயில்வே பள்ளியில் இனிப்பு வழங்கினர்.
ரயில்வே ஊழியர் மற்றும் தொழிற்சங்க செயல் தலைவர் பழனிவேல் மகன் வீரமுத்துவேல். விழுப்புரம் ரயில்வே பள்ளியின் முன்னாள் மாணவர் என்று பெருமை கொள்ளும் விதமாக பொன்மலை ரயில்வே பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
'சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததின் மூலம் இந்தியா பெருமை கொண்டுள்ளது . அடைந்த சாதனையை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து உள்ளனர். இருந்தாலும், திட்டத்தின் பின்னணியில் உள்ள மூளை பலருக்கு தெரியாது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பி. வீரமுத்துவேலின் சிந்தனையில் உருவானதுதான் இந்த திட்டம். இவருடைய திறமை யையும்,நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியதால், 'சந்திரயான்-3'ன் தலைவராகவும், தற்போது நிலவு பயணத்தின் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி படிப்பை விழுப்புரத்தில் பயின்ற வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதற்காக தொழிற்கல்வி படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பொறியியல் படித்துள்ளார். பின்னர் முதுநிலையை திருச்சி என் ஐ டியில் முடித்து எச்ஏஎல் பெங்களூரு பணியில் சேர்ந்த சில மாதங்களில் இஸ்ரோ விஞ்ஞானியாக சேர்ந்தார்.பின்னர் பணியில் இருந்து கொண்டே ஆராய்ச்சி படிப்பை சென்னை ஐஐடியில் முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது 41 வயதான வீரமுத்துவேல் இந்த வரிசையில் இடம்பிடித்து , தமிழ்நாட்டுக்கு பெருமை, இவரின் தந்தை ரயில்வேயில் பணி புரிந்தார் என்பது ரயில்வே தொழிலாளருக்கும் பெருமையாக உள்ளது.
இந்த சாதனையையும் பெருமையையும் கொண்டாடும் விதமாக மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ , நிர்வாகி ஆர்.கே.ராஜா, தேவா, ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக ரயில்வே சொசைட்டி இயக்குனர், ஆர்.விஜயகுமார், 46வது மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் , பள்ளித் தலைமை ஆசிரியர் கலையரசன், கலந்து கொண்டு விஞ்ஞானி தந்தை ரயில்வே தொழிலாளி என்றும், விஞ்ஞானி விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்து சாதனை படைத்துள்ளார் என்பதை பற்றி கூறி மாணவர்களுக்கு இது போல சாதனை படைத்து வெற்றி பெற வேண்டும் என கூறி இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள், பள்ளி அசிரியர்கள், ரமேஷ், ஜேம்ஸ் , கோவிந்தன், மற்றும் ஆசிரியர்கள் , மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu