நிழல் குடைகளை சுத்தம் செய்து பயன்பாட்டில் கொண்டு வரும் போலீசார்.

நிழல் குடைகளை சுத்தம் செய்து  பயன்பாட்டில் கொண்டு வரும் போலீசார்.
X

பயணிகள் நிழற்குடையை சுத்தம் செய்யும் போலீசார்

திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் உத்தரவு. பஸ் நிறுத்தங்களில் நிழல் குடைகளில் ஆக்கிரமிப்பை போலீசார் அகற்றி சுத்தம் செய்தனர்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று திருச்சி மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாநகரில் உள்ள பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் உள்ள பயணிகள் நிழல் குடையில் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததை கண்டார்.

உடனே அவரது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பஸ் நிறுத்தங்களில் இருக்கும் நிழற்குடைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிழல் குடைகளை சரி செய்ய அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகரில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சுப்ரமணியபுரம் ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழல் குடையை போக்குவரத்து போலீசார் முதல் கட்டமாக தண்ணீரைக் கொண்டு கழுவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதே போல மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பயணிகள் நிழற்குடைகளை போலீசார் சுத்தம் செய்து சமூக விரோத செயல்களில் யாரும் ஈடுபடாத வண்ணம் செயல் படுத்த தொடங்கியுள்ளனர். மாநகர போலீஸ் கமிஷனர் அடுத்தடுத்த அதிரடியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story