திருச்சி போலீசாரின் பரிசோதனைக்கு ரூ.1 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

திருச்சி போலீசாரின் பரிசோதனைக்கு ரூ.1 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
X
மருத்துவ உபகரணங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருச்சி மாநகரில் பணிபுரியும் காவலர்களின் நலன்கருதி ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடந்த 12-ந்தேதி காலை திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவர் மற்றும் காவலர்கள் இதய பரிசோதனை செய்ய சாதாரண பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது, இதய பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்ய வசதி இல்லை என தெரிவித்தார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று 22-ந்தேதி திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவலர்களின் நலன்கருதி சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களான ரத்த சர்க்கரை அளவு சோதனை செய்ய குளுக்கோ மீட்டர் கருவி, உயரம் அளக்கும் கருவி, சர்க்கரை அளவு பார்க்கும் Strips, சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, மற்றும் இதய மின் விரைவி (ECG machine) ஆகிய மருத்துவ பரிசோதனை உபகரணங்களை மருத்துவ பரிசோதனைக்கு காவல் மருத்துவமனைக்கு வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்