திருச்சி காவல் துறையில் "முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்" துவக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக "முக அடையாளம் கண்டறியும்மென்பொருளை" தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில்,திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் அறிவுரைகளின்படி, முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துவக்க விழா திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முக அடையாளம் கண்டறியும்மென்பொருளை தொடங்கி வைத்து அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய காவலர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறினார்.
இதனை தொடர்ந்து, மேற்படி காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு திருச்சி மாநகர-மாநில குற்ற ஆவண காப்பக இணைப்பு பணி காவல் ஆளிநர்களால் 3 பகுதிகளாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக காலை வேளையில் ௫௯ காவல் அலுவலர்களுக்கும், மதிய வேளையில் 55 காவல் அலுவலர்களுக்கும் வகுப்புகள்எடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 07.10.21-ஆம் தேதி காலை வேளையில் 55 காவல் அலுவலர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த எப்.ஆர்.எஸ்.மென்பொருளானது ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில்CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளநபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இந்த மென்பொருளை காவல் நிலையத்தில் இணையதள வசதியுள்ள கணிணியிலும், களப்பணியின் போது கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும்அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன்ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம். இந்த செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில்உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால் இந்த செயலியின்மூலமே சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்ப செயலியை பயன்படுத்தி காவல் அலுவலர்கள் ரோந்து பணி, வாகன தணிக்கை மற்றும்இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போதுகுற்றவாளிகள்,சந்தேகத்திற்குரிய நபர்களின்புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப்பின்னணியையும் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்களின் மீது பிடியாணை நிலுவையில்உள்ளதா? என்பதை கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். அத்துடன்காணாமல் போன நபர்களையும் இந்த செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும்.
இந்நிகழ்வில், திருச்சி காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) சக்திவேல்மற்றும் காவல் துணை ஆணையர் (குற்றம் & போக்குவரத்து) முத்தரசு ஆகியோர்கலந்து கொண்டு "முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் குறித்தும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றியும் பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu