திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே கறி கடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7000 மதிப்புள்ள செல்போனை ஜாக்கி என்கிற பிரசாத்(வயது 23). பறித்துச் சென்றார். அவரை கே.கே. நகர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல் கே.கே. நகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7000 மதிப்புள்ள செல்போனை ஜெயசீலன் (19) என்பவர் பறித்துச் சென்றார். அவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையுமின்றி ஒரு வருட காலம் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார் .இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் இருவரிடமும் இன்று வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu