திருச்சி நகரில் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி துவங்கியதாக ஆணையர் தகவல்

திருச்சி நகரில் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி துவங்கியதாக ஆணையர் தகவல்
X

திருச்சி நகரில் குப்பை மேட்டில் மேயும் பன்றிகள்.

திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தினை உரிய முறையில் பராமரிக்கவும், சாக்கடைக் கட்டுமானங்களை பாதுகாத்து நோய் பரவுவதை தடுக்கவும், மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள் அற்புறப்படுத்தவும், குதிரை மற்றும் பன்றி வளர்ப்பதினை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது திருச்சி மாவட்ட அரசிதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், பன்றிகள் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே திருச்சி மாநகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி, தேசிய உறைவாள் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றார்!