அடிப்படை வசதிகள் கோரி திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் மனு அளிப்பு

திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் கட்டிடங்கள் புதுப்பிக்கப்படாமல் பழைமையான சூழலில் உள்ளதால் மாணவர்கள் மிகவும் சீரமப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு போதிய பேருந்து இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய அவலநிலை ஏற்படுகிறது.
கூடுதலாக கல்லூரி முடியும் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். எனவே மாணவர்களின் நலன் கருதி உடனடியாக இவற்றை சீரமைத்து தரக்கோரி மாணவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் அழகுராஜா, மாவட்ட குழு உறுப்பினர் தீனா, கல்லூரி கிளை நிர்வாகி தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu