திருச்சியில் தமிழறிஞர் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழறிஞர் வீரமாமுனிவரின் 343-வது பிறந்தநாள் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இத்தாலியில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வெள்ளைக்காரர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக 1710 ம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்திற்கு வந்தார். தமிழ் மொழி மீது உள்ள பற்றின் காரணமாக தமிழ் இலக்கியத்தை கற்றறிந்தார். பின்னர் திருக்குறள், தேவாரம் போன்ற தமிழ் நூல்களில் மேல்நாட்டினரும் அறியும் வண்ணம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்த்தார். தமிழ் மொழி மீது இருந்த பற்றின் காரணமாக வீரமாமுனிவர் என தனது பெயரை மாற்றிக்கொண்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தங்கி இருந்து இறைப்பணியுடன் தமிழ் பணியும் செய்துள்ளார்.
அவரது பிறந்த நாளையொட்டி திருச்சி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருச்சி எடத்தெரு பழைய கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன். மத்திய மண்டல செயலாளர்அலெக்ஸ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிரியார் தாமஸ், பாதிரியார் விஜய் பெலவேந்திரன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
மாநில துணை அமைப்புச் செயலாளர் பாஸ்டர் சாம்ராஜ், மாநில ஆர்.சி துணை அமைப்புச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட அவைத்தலைவர்கள் ஜேக்கப் ஆண்ட்ரூஸ், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தேவராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ்சேவியர் ,ஆரோக்கியராஜ் ,ஜெரால்ட், எட்வர்ட், மகளிர் அணி நிர்மலா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu