இந்திய மாதர் சம்மேளனத்தின் மறைந்த தலைவி படத்திற்கு திருச்சியில் மரியாதை

இந்திய மாதர் சம்மேளனத்தின் மறைந்த தலைவி படத்திற்கு திருச்சியில் மரியாதை
X

திருச்சியில் மறைந்த இந்திய மாதர் சம்மேளன தலைவி ஜனகம் இஸ்மாயில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்திய மாதர் சம்மேளனத்தின் மறைந்த தலைவி ஜனகம் இஸ்மாயில் படத்திற்கு திருச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மறைந்த தலைவர் பெண்ணுரிமை போராளி ஜனகம் இஸ்மாயிலின் இருபதாம் ஆண்டு நினைவு நாள் உறையூர் பகுதியில் இன்று காலை மாமன்ற முன்னாள் உறுப்பினர் வை. புஷ்பம் தலைமையில் நடைபெற்றது. 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர்க. சுரேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, துணைச் செயலாளர் முருகன், பகுதி குழுஉறுப்பினர்கள் சத்யா, சரண்சிங், ராமமூர்த்தி மற்றும் அஜித் குமார், ஆட்டோ ராஜா ,காந்தி, மணிமேகலை உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்ட ஜனகம் இஸ்மாயில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story