திருச்சி நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் செல்போன் எண்கள் அறிவிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் செல்போன் எண்கள் அறிவிப்பு
X

திருச்சி நாடாளுமன்ற  தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024 ஐமுன்னிட்டு 24. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் குமார் ஐஏஎஸ் மற்றும் காவல்துறை பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஐபிஎஸ் ஆகியோர்26.03.2024 திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த தேர்தல் பார்வையாளர்கள் திருச்சிராப்பள்ளி சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர்.மேற்படி தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்(பொது) மற்றும் தேர்தல் பார்வையாளர்(காவல்) ஆகிய பார்வையாளர்களை தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரிலும், பிற நேரங்களில் தொலைபேசியிலும் பொதுமக்கள் பின்வருமாறு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வ. எண் தேர்தல் பார்வையாளர் விபரம் பெயர் அறை விபரம் தொலைபேசி எண் கீழே தரப்பட்டு உள்ளது.

1. தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் குமார் ஐஏஎஸ் சுற்றுலா மாளிகை, மன்னார்புரம் அறை எண் : பி.தொலைபேசி எண்: 93639 66321

2. தேர்தல் காவல் பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஐபிஎஸ் சுற்றுலா மாளிகை, மன்னார்புரம் அறை எண் : பி தொலைபேசி எண்: 93637 66948

இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து