திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரசார் சத்யாகிரக போராட்டம்
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த சத்யாகிரக போராட்டத்தில் மாவட்ட தலைவர் கலை பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கதுறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்த மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்து திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் சத்தியா கிரக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பி.ஜே.பி. கட்சியினரை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது புள்ளம்பாடி நகரத் தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் வட்டார தலைவர்கள் லால்குடி சுப்பிரமணியன் சுகுமார், புள்ளம்பாடி அர்ஜுனன், துறையூர் மாணிக்கம், தொட்டியம் குணசேகரன், நகரத் தலைவர்கள் தண்டாயுதபாணி, முசிறி சுரேஷ், புள்ளம்பாடி இளங்கோவன், ஜெகதீசன், செல்லப்பன், ஏரி குளம் சரவணன், மகளிர் அணி பொறுப்பாளர் வக்கீல் மோகனாம்பாள், மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவி அகிலா பால் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu