திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா
திருச்சி சோமரசம் பேட்டையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிலை இல்லாத இடங்களில் எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. சில மாவட்டங்களில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் சில இடங்களில் எம்ஜிஆர் உருவ படத்தினை தெருக்களில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலளார் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu