திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு இனி காலை மட்டுமே குடிநீர்

திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு இனி காலை மட்டுமே குடிநீர்
X
திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு இனி காலை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் இருவேளை வழங்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் , நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரானது மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது . ஆகையால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை , வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .

இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் , குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து