திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் மேயர் தலைமையில் பகுதி சபா கூட்டம்

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் மேயர் தலைமையில் பகுதி சபா கூட்டம்
X

திருச்சி மாநகராட்சி பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் மேயர் அன்பழகன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2024) திருச்சிராப்பள்ளி மாநக ராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு ஆட்டுமந்தை தெரு, உடற்பயிற்சி கூடம் அருகில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து உதவி ஆணையர் தவெங்கட்ராமன் முன்னிலையில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார்.

இந்தக் கூட்டத்தில் , ஆட்டுமந்தை தெரு , ஆப்பகாரத் தெரு வள்ளுவர் தெரு,பிஷப் குளத் தெரு, சவேரியார் கோவில் தெரு , புத்தூர் பாத்திமா தெரு, வி. என். பி. தெரு,மீன் கார தெரு, பெருமாள் கோவில் தெரு , முலைக் கொல்லை, தென்னூர், ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் . பொதுமக்கள் அளித்த 46 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் .

முன்னதாக மேயர் மு. அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!