திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் இன மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டிப்பதாக கூறி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது ரத்தினவேல் பேசுகையில்,

கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர் எம்ஜிஆர். அதிமுகவை ஆரம்பித்து 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர். திமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டு காலம் கோட்டை பக்கம் கருணாநிதியால் செல்ல முடியவில்லை. இன்றைக்கு அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆரை பற்றி ஆ.ராசா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இந்த ஆட்சியில் சொத்துவரி மின்கட்டணம் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த திமுக குடும்ப உறுப்பினர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் பூபதி நன்றி கூறினார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!