திருச்சி மாரீஸ்மேம்பாலத்தை 60 அடி சாலையாக மாற்ற கோரிக்கை

திருச்சி மாரீஸ்மேம்பாலத்தை 60 அடி சாலையாக மாற்ற கோரிக்கை
X

திருச்சி கோட்டை ரயில் நிலையம் (பைல் படம்)

திருச்சி மாரீஸ் மேம்பாலத்தை 60 அடி சாலையாக மாற்ற அமைச்சர் நேரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி எம்.ஜி.ஆர். நற் பணி மன்றத்தின் நிறுவனச் செயலாளர் கண்ணன் என்கிற ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள மாரீஸ் மேம்பாலம் புதிதாக 60 அடி அகல சாலை மேம்பாலமாக கட்டப்பட வேண்டும். கடந்த 22 வருட காலமாக மாநகராட்சி நிர்வாகம்தான் புதிய பாலத் திட்டத்தை தள்ளிக்கொண்டே தடுத்துக்கொண்டே வருகிறது.

அரங்கராஜன் குமாரமங்கலம் காலம் ஜெயலலிதா காலம் கடந்து பிறகு இப்போது இம்மண்ணின் மைந்தர் கே.என். நேரு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது திருச்சி மாநகராட்சி புதிய பாலத் திட்டத்தை திசை திருப்பி வருகிறது. இம்முறை நாம் விடுவதாக இல்லை. மெயின் கார்டு கேட் முனை தொடங்கி சாமிநாத சாஸ்த்திரி சாலை முனை வரையில் 60 அடி அகல சாலையை கோட்டை ரயில் நிலையம் வடக்கில் இருந்து புது டெல்லியில் உள்ளது போல இரு புறங்களிலும் பஸ் ஸ்டாப்புடன் வடிவமைக்க வேண்டும் .

வரும் காலத்தில் கோட்டை ரயில் நிலையம் மாநகரின் பெரிய ரயில் பஸ் இணைந்த டிராபிக் ஜங்ஷனாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்க அரசு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!