திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகள் மூடல்

திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகள் மூடல்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மது பான கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் 2021 அக்டோபர்09 அன்று நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 07.10.2021 முற்பகல் 10.00 மணி முதல் அக்டோபர்09 இரவு 12.00 மணி வரையிலும், 12.10.2021 அன்று வாக்குப் பதிவு எண்ணிக்கைநடைபெறவுள்ளதால் அன்றைய தினம் முழுவதும், திருச்சி மாவட்டம்போசம்பட்டி, நாகமங்கலம், பழங்கனாங்குடி, கீழக்குறிச்சி, கே.பெரியபட்டி, சீகம்பட்டி,தேனூர், தேத்தூர், கொடும்பப்பட்டி, கொன்னைக்குடி, ஜெயங்கொண்டான்,பயித்தாம்பாறை, தும்பலம், எம்.களத்தூர், கொணலை, ஓமாந்தூர், ஸ்ரீராமசமுத்திரம்,பைத்தம்பாறை, சேனப்பநல்லுார், ஆங்கியம், சிறுமருதுார் வடக்கு, சிறுமருதுார்தெற்கு, கீழரசூர் வடக்கு, கீழரசூர் மேற்கு மற்றும் வையம்பட்டி, மருங்காபுரி,துறையூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்இடங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கும்.

அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் அக்டோபர் 07 முற்பகல் 10.00 மணி முதல் அக்டோபர் 09 இரவு12.00 வரையிலும் மற்றும் அக்டோபர் 12 அன்றைய நாள் வாக்கு எண்ணிக்கைடைபெறும் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் முழுவதும் விற்பனைமதுபானம் இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில்மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டுசெல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
crop opportunities ai agriculture