திருச்சி குமுளூர் வேளாண்மை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி குமுளூர் வேளாண்மை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி அருகே உள்ள குமுளூர் வேளாண்மை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டம் குமுளூர் வேளாண்மை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று (21.12.2023) நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (21.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இக்கல்லூரியில் நடைபெற்று வரும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் வேளாண் பட்டயப்படிப்பு குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பண்ணை இயந்திரவியல் துறையில் பண்ணை இயந்திரங்களை சோதனை செய்து சான்றிதழ் அளிக்கும் மையத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.நெல் பயிருக்கான விதை, பயன்படுத்தப்படும் பண்ணைக் கருவிகளான சுழல் கலப்பை வகைகள், நாற்று நடும் இயந்திர வகைகள் களைக்கருவிகள், அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றை பார்வையிட்டாh;. புதுப்பிக்கதக்கவல்ல ஆற்றல் துறையின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரி இளநிலை மாணவர் களின் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

சிறுதானிய மற்றும் பயறு பதனிடும் மையத்தில் சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் உமி நீக்கும் கருவியின் செயல் விளக்கத்தையும், பாசிப் பயிறு மற்றும் உளுந்தின் தோல் நீக்கும் கருவியின் செயல் விளக்கத்தையும், அடுமனையகத்தில் தயாhpக்கப்படும் சிறுதானிய ரொட்டி மற்றும் கேக் வகைகளையும் பார்வையிட்டார்.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்பின் செயல் நுணுக்கங்கள், பசுமை குடிலில் வளர்க்கப்படும் தாவரங்களையும், நாற்றங்கால் பண்ணை மற்றும் நெல் விதை உற்பத்தி வயல்வெளிகளையும் கள ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், கல்லூரியின் முதன்மையர் ராஜ்குமார், முதல்வர் சிவக்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story