மின்னொளியில் ஜொலிக்கிறது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம்: நாளை காலை திறப்பு

மின்னொளியில் ஜொலிக்கிறது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம்: நாளை காலை திறப்பு
X

நாளை திறப்பு விழா காணும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் நாளை காலை திறந்து வைக்கப்படுகிறது.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது. நாளை காலை இந்த பாலம் திறந்து வைக்கப்படுகிறது.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் மிகவும் பழமையானதாகவும் குறுகலாகவும் இருப்பதால் அதற்கு பதிலாக புதிய பாலம் ஈரடுக்கு மேம்பாலமாக கட்டும் பணியானது கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்பொழுது நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவசர அவசரமாக பணி தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டுமான பணியானது திண்டுக்கல் சாலை, கிராப்பட்டி பகுதி. ஜங்ஷன் பகுதி ஆகிய கரைகளில் முடிவடைந்தது. ஆனால் பாலத்தை சென்னை சாலையுடன் இணைக்கும் மன்னார்புரம் பகுதியில் சாலையை இணைப்பதற்கு பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலம் தேவைப்பட்டதாலும், அதனை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நீண்ட காலமாக தர மறுத்து இழுத்தடித்து வந்ததாலும் பல வருடங்களாக கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் மத்திய மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக அனுமதி கிடைத்தது. இதன் காரணமாக சுமார் 9 ஆண்டு காலம் காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த பணி மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பாலம் கட்டுமான பணி முடிவடைந்ததை தொடர்ந்து பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்று உள்ளது.

இந்நிலையில் இந்த பாலத்தின் திறப்பு விழா நாளை காலை நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு தமிழக அமைச்சர்கள் இந்த பாலத்தை திறந்து வைக்கிறார்கள்.


முன்னதாக நாளை பாலம் திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று இரவு பாலத்தின் இரு கைப்பிடி சுவர்களிலும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுமார் 9 ஆண்டு காலம் நடைபெற்ற பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்று நாளை திறப்பு விழா காண இருப்பதையொட்டி இந்த சாலை இனி போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 9 ஆண்டுகால பிரச்சுனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது .

இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பின்னர் தற்போது உள்ள பழமையான பாலம் இடிக்கப்பட்டு அந்த பகுதியிலும் புதிய பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ai solutions for small business