திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா விரைவு ரயிலில் வெளிமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு குழந்தைகள் உதவி நல மையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மற்றொரு ரயிலில் வெளி மாநிலத்தில் இருந்து குழந்தை தொழிலாளர்களாக தமிழகத்திற்கு அழைத்து கொண்டு வரப்பட்ட 3 பேர் மீட்கப்பட்டனர். மொத்தம் 7 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

அது மட்டுமல்லாமல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் பெங்களூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையில் இருந்த குட்காவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு சுமார் ரூ.28 ஆயிரத்து 308 இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!