திருச்சி பத்திரிக்கையாளர் ரகு மாரடைப்பால் அகால மரணமடைந்தார்
பத்திரிக்கையாளர் ரகு
திருச்சி, மண்ணச்சநல்லூர் பகுதியில் திருமஞ்சனத்தெருவில் வசித்து வந்தவர் ரகு (47). இவர் பத்திரிக்கையாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். தினகரன், மாலைமுரசு ஆகியவற்றில் நிருபராக பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து இணையதள பத்திரிக்கையாளராக பணி செய்தார். பெங்களூரில் இயங்கி வந்த லைவ்டே இணைய வழி செய்தி நிறுவனத்தில் பணியாற்றினார். பல சிறு இதழ்களையும் நடத்தினார். இன்ஸ்டாநியூஸ் நிறுவனத்திலும் சிறிது காலம் பணி செய்தார். இன்று காலை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ரகு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எதிர்பாராத அவரது பிரிவு நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியளவில் திருமஞ்சனத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்செல்கிறது. இன்ஸ்டாநியூஸ் நிறுவனம், பத்திரிக்கையாளர் ரகு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu