மேயர் உத்தரவின்டி திருச்சி ஜே.கே.நகரில் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

மேயர் உத்தரவின்டி திருச்சி ஜே.கே.நகரில் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்
X

திருச்சி ஜே.கே.நகரில் சாலை சீரமைப்பு பணி நடந்தது.

மேயர் அன்பழகன் உத்தரவின்டி திருச்சி ஜே.கே.நகரில் சாலை சீரமைப்பு பணிகள் உடனடியாக நடந்தது.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கடந்த செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ஜே.கே.நகரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்கம் சார்பில் மேயரிடம் கொட்டப்பட்டு குளத்து நீர் பிரச்சினை மற்றும் தெருக்களில் மழைநீர் பாதிப்பால் சேதமடைந்த சாலைகள் பற்றியும் மழைநீர் வடிகால் கட்டித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில் உடனடியாக சேதமடைந்த சாலைகளை செப்பனிட மேயர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி மேற்பார்வையில் இன்று காவேரி தெரு, அமராவதி தெருவில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது. பள்ளமான பகுதிகளில் மணல் நிரப்பி சமன் செய்யப் பட்டது. மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினரிற் இந்த உடனடி பணிகளை ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!