திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம்
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்கப்பகுதி மக்கள் நல சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கைகுழு) தலைவர் அருள் ஜோஸ் பேசினார்.
திருச்சி ஜே. கே. நகர். விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று ஆர்.எஸ். புரம் பார்க் எதிரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் ஆண்ட றிக்கை தாக்கல் செய்தார். பொருளாளர் சாமுவேல் சதீஷ்குமார் வரவு செலவு கணக்கு அறிக்கையினை தாக்கல் செய்து பேசினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் ( நடவடிக்கை குழு) மாவட்ட தலைவரும் ,ஓய்வு பெற்ற தாசில்தாருமான அருள் ஜோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக பேசினார். கருணாநிதி வாழ்த்தி பேசினார்.
இந்த கூட்டத்தில் ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச் சங்கம் எதற்காக தொடங்கப்பட்டது. அதன் நோக்கம், ஓராண்டு கால செயல்பாடுகள் அடுத்து நகரின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்கள் கொட்டப்பட்டு குளத்து நீரால் நகரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சங்கத் தலைவர் திருஞானம் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
நகரின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை சங்கத்தின் கௌரவ தலைவரும் ஆலோசகருமான ஓய்வு பெற்ற மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் கண்ணன் தீர்மானமாக முன்மொழியே அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு கரகோஷம் எழுப்பினார்கள். முன்னதாக ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் லோகோவை வடிவமைத்து கொடுத்த இளம் பொறியாளர் மகேஷ்வரனுக்கு சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது .
சிறப்பு விருந்தினர் அருள் ஜோஸ் தனது சிறப்புரையில் ஒரு சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் சங்க நிர்வாகிகள் எவ்வாறு இருக்க வேண்டும் தன்னலமற்ற உழைப்பினால் தான் ஒரு சங்கத்தை நிலை நிறுத்த முடியும் வளர்ந்து வரும் இப்பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சங்க நிர்வாகிகள் எவ்வாறு உழைக்க வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கி பேசினார் .இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள், சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் சங்க துணை தலைவர் ஆர். பொன்சாமி வரவேற்று பேசினார் .முடிவில் சங்க இணை செயலாளர் ஜெடிக்ஸ் நன்றி கூறினார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சங்க எதிர்கால வளர்ச்சி மற்றும் தெருக்களில் உள்ள குறைபாடுகள் பற்றி கருத்து கேட்கப்பட்டது .உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் வெளியிட்ட கருத்துக்களுக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதில் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu