திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
X

திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று சங்க தலைவர் திருஞானம் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஆர்.எஸ்.புரம் பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். பொருளாளர் சாமுவேல் சதீஷ் முன்னிலை வகித்தார்.

சங்க கௌரவ தலைவர் ஓய்வு பெற்ற மின்வாரிய கோட்ட பொறியாளர் கண்ணன், நிர்வாகிகள் குலோத்துங்கன் பொன்னுசாமி, அச்சுதன் குகன், முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் சங்க உறுப்பினர் ஓய்வு பெற்ற உதவி போலீஸ் கமிஷனர் எம்.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .

இதனைத் தொடர்ந்து ஜே.கே.நகர் விரிவாக்கப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு செல்வதற்கான தற்காலிக மழைநீர் வடிகால் அமைத்து கொடுத்தது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பது, ஆகஸ்ட் மாதம் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது, சங்க உறுப்பினர்களிடம் வருடாந்திர சந்தா தொகை வசூலிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!