திருச்சி ஜே.கே. நகரில் குழாய் உடைப்பினால் வீணாக வெளியேறும் குடிநீர்

திருச்சி ஜே.கே. நகரில் குழாய் உடைப்பினால் வீணாக வெளியேறும் குடிநீர்
X

திருச்சி ஜே.கே.நகரில் குழாய் உடைப்பினால் காவிரி குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது.

Cauvery Water Supply - திருச்சி ஜே.கே. நகரில் குழாய் உடைப்பினால் காவிரி குடிநீர் வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Cauvery Water Supply - திருச்சி மாநகராட்சி 61வது வார்டில் உள்ளது ஜே.கே.நகர். வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியான இங்கு சுமார் 7 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத்நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஜே.கே.நகர், லூர்து நகர், முகமது நகர், திருமுருகன் நகர், ஆர்.எஸ்.புரம் ஆர்.வி.எஸ். நகர், காந்தி நகர், இந்திரா நகர் , பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லும் மெயின்குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. ஜே.கே.நகர் காவேரி தெருவிற்கு திரும்பும் பாதையில் கடந்த 2 நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. இந்த குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்கும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil