/* */

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி இன்று காலை துவக்கம்

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியை இன்று காலை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி இன்று காலை துவக்கம்
X

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு தலைமையில் இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது.

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். இந்நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கு திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தமிழக முதுல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக துறை திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி ஆணை வழங்கி ரூ.350 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.


இதனை தொடர்ந்து இன்று காலை பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிராவல் மண் அடிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர் நேரு கிராவல் மண் ஏற்றி வந்த லாரிக்கு பச்சை கொடி காட்டினார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் மற்றும் கோட்ட தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா