/* */

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.75 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டிற்கு வந்தது.

HIGHLIGHTS

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்
X

திருச்சி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

பிரதமர் மோடி திருச்சி அரசு மருத்துவமனையில் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்த மையத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசகன், மாவட்ட கலெக்டர் சிவராஜ் ஆகியோர் இந்த மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையமானது ரூ. 1.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கான மருத்துவ சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Oct 2021 11:15 AM GMT

Related News