திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனைக்கு என்.ஏ.பி.எச். தரச்சான்று
டாக்டர் ராதாகிருஷ்ணன்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது.
பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளித்த மருத்துவமனை.இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து அவர்களை நோயில் இருந்து குணப்படுத்தியுள்ளனர். வெளி நோயாளிகள் 2 லட்சம் பேர் வந்துள்ளனர். உள்நோயாளிகள் 70 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
இவை அனைத்திற்கும் காரணம் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவாக செயல்படும் முறை தான். மேலும் சிறப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது ஆகும்.நோயாளிகள் விரைவாக குணமடைய மருத்துவமனையின் செவிலியர்கள் பங்கு அளவிட முடியாதது.
அவர்களுக்கு தேவையான போது மருந்து கொடுப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, குடும்பத்தில் ஒருவராக பாவிப்பது, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே கண்டுபிடிப்பது.
தரமான அதி நவீன உபகரணங்கள் உள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் டயாலிசிஸ் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றதில் பலர் பயனடைந்து வருகின்றனர்.
திருச்சி மாநகரில் தூய்மையான மருத்துவமனைகளில் ப்ரண்ட்லைன் மருத்துவமனையும் உள்ளது என்பது பெருமை கொள்ளக்கூடியது.இதற்கு தூய்மைப் பணியாளர்களின் பணியே காரணம். நாங்கள் என்.ஏ.பி.எச். தர சான்றிதழ் பெற்று இருக்கின்றது.அனைத்து இன்சூரன்ஸ் வசதிகள் உள்ளன.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டு வந்தால் 30 நிமிடங்களில் அவர்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்து அவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினர் விரைவாக தீர்மானித்து விடுகின்றனர்.
பல புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவை நோயாளிகளுக்கு பல விகிதங்களில் பயனளிக்கிறது. அனைத்து அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. அதிலும் லேப்ராஸ்கோப்பி முறையில் பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் ஆகியவற்றில் எண்ணற்ற நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். கொரோனா காலத்தில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை எப்பொழுதும் செயல்படுவது போல் செயல்பட்டு எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu