திருச்சியில் 19-வது நாளாக விவசாயிகள் காதில் பூவை சுற்றி போராட்டம்

திருச்சியில் 19-வது நாளாக விவசாயிகள் காதில் பூவை சுற்றி போராட்டம்
X

காதில் பூ சுற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

திருச்சியில் இன்று 19வது நாளாக காதில் பூவை சுற்றிக்கொண்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் கரூர் பைபாஸ் ரோடு, மலர் சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக்கோரியும், அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.

ஏற்கனவே 18 நாட்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இன்று 19-வது நாளில் மத்திய அரசு விவசாயிகளின் காதில் பூ சுற்றி விட்டது என்பதற்காக இன்று விவசாயிகள் காதில் பூவை சுற்றி கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business