திருச்சி எல்பின் நிறுவன மோசடியில் ஏமாந்தவர்கள் புகார் செய்ய வேண்டுகோள்

திருச்சி எல்பின் நிறுவன மோசடியில் ஏமாந்தவர்கள் புகார் செய்ய வேண்டுகோள்
X
திருச்சி எல்பின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முல்லைநகர், முல்லை டவர்ஸ் என்ற இடத்தில் ரமேஷ், பாதுஷா, சாகுல் அமீது ராஜா மற்றும் பஷீர் ஆகியோர் சேர்ந்து எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி அதில் பொதுமக்களிடம் முதலீடு பெற்று முதலீடு செய்த தொகையை திருப்பி தராமல் ஏமாற்றி நிறுவனத்தை மூடி விட்டு மேற்படி நபர்கள் தலை மறைவாகி விட்டனர்.

இதனால் திருவாரூரை சேர்ந்த வீரக்குமார் என்பவர் கொடுத்த புகரின்பேரில் திருச்சி பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது வரை புகார் கொடுக்காதவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பல் துறை கட்டிட வளாகம் முதல்தளம் மன்னார்புரம் திருச்சி என்ற அலுவலகத்தில் புகார் கொடுக்க வேண்டும்.

மேலும் விவரம் அறிய 0431 2422220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீதிபதியின் முகவரி ஏஏ67-வது தெரு. அண்ணாநகர், சென்னை-600040.தொலை பேசி எண்-93832-12249, 044 26212249

மேற்கண்ட நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து வேறு எந்த திட்டம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு ஏதும் வந்தாலும் அந்த நிறுவனத்தில் பொதுமக்கள் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இந்த தகவலை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!