திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
X

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகர பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடுகள் வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்த மனு கொடுக்கும் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் பாலக்கரை பகுதி செயலாளர் சிவகுமார்,மாநகர மாவட்ட செயலாளர்ராஜா, டைபி மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் திருச்சி கிழக்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மஞ்சுளா மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுவை வாங்கி சென்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்