திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெரும் குறை தீர்க்கும் முகாம் ஜெயில் கார்னர் பகுதியில் இன்று நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான குண்டும், குழியுமான சாலைகளை சீர்படுத்தி தரக் கோரியும், மழைக்காலங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் குளம்போல் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதை தடுத்து முறையான பாதாளசாக்கடை வசதியை ஏற்படுத்தி தரக் கோரியும், பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளை பழுது நீக்கீ புதுப்பித்து தர கோருவது உள்ளிட்ட தங்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக எழுதி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் வழங்கினர்.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பேசுகையில்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 200 நாட்கள் ஆகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்ற முதல்வராக திகழ்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதனை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடத்தப்பட்ட முகாமில் தற்போது வரை 1533 கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக அளித்துள்ளனர்.
அதில் 512 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். மேலும் இப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி புதுக்கோட்டை சாலை ஓரத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளின் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu