கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை: திருச்சி திமுகவினர் சுறுசுறுப்பு

அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu